ஐஎஸ் தலைவர் தடுத்துவைப்பு: அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

1 mins read
b031e631-c6c1-491d-92d1-2826f569f666
கோப்புப் படம்: - இணையம்

வா‌ஷிங்டன்: ஐஎஸ் அமைப்புத் தலைவர் ஒருவரைத் தாங்கள் தடுத்துவைத்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை (ஜூன் 4) அறிவித்தனர்.

ஈராக், ஈரானில் அனைத்துலகக் கூட்டணி நடவடிக்கை மேற்கொண்டபோது அந்த ஐஎஸ் தலைவர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்த ஐஎஸ் அமைப்பு வரைந்த திட்டங்களுக்கு இடையூறு விளைவித்து அவற்றின் வீறியத்தைக் குறைக்க கடந்த மே மாதம் 21லிருந்து 27ஆம் தேதி வரை ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் (சென்ட்காம்) எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

ஈராக்கில் ஐந்து நடவடிக்கைகளிலும் சிரியாவில் ஒரு நடவடிக்கையிலும் ஆதரவு தரும் அமெரிக்க ராணுவம், ஐஎஸ் அமைப்பினர் இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. ஐஎஸ் தலைவர் உட்பட இருவர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் குறிப்பிட்டது. பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

“வட்டார அளவில் ஐஎஸ் அமைப்பின் செயல்பாட்டை முழுமையாக முடக்க சென்ட்காம், அதன் பங்காளிகள் கடமைப்பட்டுள்ளதை இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன,” என்று சென்ட்காம் தளபதி மைக்கல் எரிக் குரிலா அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஐஎஸ் அமைப்பு, 2014ஆம் ஆண்டில் தன்னை ஓர் ‘கேலிஃபேட்’ அமைப்பாக அறிவித்துக்கொண்டது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு ஐஎஸ் அவ்வாறு அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்