தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேரீச்சம்பழம் இங்கெல்லாம் அதிகம் விளைகிறது

1 mins read
c864465f-759a-4f5b-9347-c52d1b5e4ce3
படம்: பிக்ஸாபே -

ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் மக்களின் முக்கியமான உணவுகளில் பேரீச்சம்பழமும் ஒன்று. நோன்பு துறக்கும்போது பேரீச்சம்பழத்தை அதிகமானோர் சாப்பிடுவார்கள்.

உலக அளவில் 2021ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 9.8 மில்லியன் டன் பேரீச்சம்பழம் சந்தைக்கு வந்தது.

அமெரிக்க உணவு மற்றும் வேளாண் சங்கத்தின் தரவுகள் படி உலகில் ஆக அதிகமாக பேரீச்சம்பழம் விளையும் நாடுகள் பட்டியலில் எகிப்து முதலிடத்தில் உள்ளது.

அது 2021ஆம் ஆண்டு 1.7 மில்லியன் டன் பேரீச்சம்பழம் உற்பத்தி செய்துள்ளது.

இரண்டாவது இடத்தில் சவூதி அரேபியா (1.6 மில்லியன் டன்), மூன்றாவது இடத்தில் ஈரான் (1.3 மில்லியன் டன்) உள்ளன.

ஈராக் (0.8 மில்லியன் டன்) ஐந்தாம் இடத்திலும், பாகிஸ்தான் (0.5 மில்லியன் டன்) ஆறாவது இடத்திலும் உள்ளது.

பேரீச்சம்பழம் விளைச்சலுக்கு மத்திய கிழக்கு நாடுகள் உகந்தவையாக இருப்பதால் பேரீச்சம்பழம் அந்நாடுகளின் பொருளியல் பங்களிப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்