தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்

1 mins read
92df00aa-cf00-40ee-83ab-dfafac62f3ad
பெ‌ஷாவர் செல்லவிருந்த விரைவு ரயில் அருகே குண்டு வெடித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

குவெட்டா: பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது 24 பேர் மாண்டனர்.

இச்சம்பவத்தில் 40க்கும் அதிகமானவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெ‌ஷாவர் செல்லவிருந்த விரைவு ரயில் கிளம்பவிருந்த நேரத்தில் குண்டு வெடித்தது.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

“ராணுவ அதிகாரி ஒருவரை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்,” என்று பலுஜிஸ்தான் காவல்துறைத் தலைவர் மூசம் ஜான் அன்சாரி தெரிவித்தார்.

காயமடைந்த 44 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக காலை நேரங்களில் குவெட்டா ரயில் நிலையத்தில் அதிக கூட்டம் இருக்கும், அந்த நேரத்தை சாதகமாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் இதை செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் நேரத்தில் தற்போது குவெட்டாவை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்