இளையர் கும்பல் ஒன்று டிக்டாக் காணொளி எடுத்தபோது, அதனைக் கண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஏழு வயதுச் சிறுவன் மரணமடைந்த சம்பவம் உலகை உலுக்கியுள்ளது.
இச்சம்பவம் லெபனான் நாட்டின் டயர் நகரில் நிகழ்ந்தது.
காணொளி எடுத்த இளையர்கள் முகமூடி அணிந்து, வாள்களைச் சுழற்றியவாறு இருந்தது, முகம்மது இஸ்தான்புலி என்ற இச்சிறுவனிடத்தில் பீதியை ஏற்படுத்தி, அவனது உயிரையே பறித்துவிட்டதாகக் கூறப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த நாளன்று காலையில் இஸ்தான்புலி தன் நினைவை இழந்து விழுந்து கிடந்ததை அவனுடைய குடும்பத்தினர் கண்டனர்.
மூக்கின்மீது சிறு கீறலைத் தவிர்த்து, இஸ்தான்புலியின் உடலில் வேறெந்தக் காயமும் இல்லை என்றும் திடீர் மாரடைப்பால் அவனது மரணம் நிகழ்ந்துவிட்டது என்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாக 'கல்ஃப் டைம்ஸ்' செய்தி கூறுகிறது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இஸ்தான்புலியின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனிடையே, டிக்டாக் காணொளி எடுத்தோர்க்கு எதிராக இஸ்தான்புலியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


