இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் குறித்து மீண்டும் வழக்கு

இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் குறித்து மீண்டும் வழக்கு

கோப்புப் படம்: ஏஎஃப்பி

11 Mar 2026 - 3:29 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் இலவச உணவுத் திட்டம் இரண்டாவது முறையாக நீதிமன்ற வழக்கை எதிர்நோக்குகிறது.

அந்த 20 பில்லியன் டாலர் (25.4 பில்லியன் வெள்ளி) மதிப்புள்ள திட்டத்தை எதிர்த்து பொது அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. அத்திட்டத்துக்கு நிதி வழங்கப்படும் முறைகளைப் பற்றி அவை கேள்வி எழுப்பியுள்ளன.

எம்பிஜி வாட்ச் என்றழைக்கப்படும் பொதுக் கூட்டமைப்பு இலவச உணவுத் திட்டத்துக்கு நிதி வழங்க வழிவகுக்கும் சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்துள்ளது. எம்பிஜி வாட்ச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அறிக்கை மூலம் இதனைத் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட சட்டத்தின் சில அம்சங்கள் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கவேண்டும் என்பது எப்ஜி வாட்சின் எண்ணம். அரசாங்க நிதிப் பயன்பாட்டைப் பொறுத்தவரை அச்சட்டம் தெளிவாக இல்லாமல் விரிவான அனுமதி தருகிறது என்பது எம்பிஜி வாட்சின் குற்றச்சாட்டு. அந்தச் சட்டம் போதுமான அளவு வெளிப்படையாக வரையப்படவில்லை என்றும் அதை முன்னிட்டு பொதுமக்களிடம் போதுமான கருத்து சேகரிக்கப்படவில்லை என்றும் எம்பிஜி வாட்ச் குறைகூறி வருகிறது.

இதோனீசியாவின் இலவச உணவுத் திட்டத்தின் மதிப்பு, அந்நாட்டு மத்திய அரசாங்கம் சென்ற ஆண்டு செலவிட்ட மொத்த தொகையில் 11 விழுக்காடாகும்.

குறிப்புச் சொற்கள்
உலகம்இந்தோனீசியாஉணவுஅரசாங்கம்நிதிவழக்கு