தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உரிமம் ரத்து; இந்தோனீசியாவுடன் தொடர்பில் டிக்டாக்

1 mins read
03267efb-d756-4e7e-bd37-09b30e2f33f0
டிக்டாக் சமூக ஊடகத் தளம். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: டிக்டாக் சமூக ஊடகத் தளத்துக்கும் இந்தோனீசியாவில் இயங்குவதற்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தோனீசியாவில் அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பிரச்சினையைச் சரிசெய்ய அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக டிக்டாக் கூறியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனீசியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அப்போது தங்கள் தளத்தில் இடம்பெற்ற நேரலை நடவடிக்கைகள் தொடர்பிலான புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொள்ள டிக்டாக் மறுத்தது.

அதனையடுத்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

“இந்த விவகாரத்தை சீரான முறையில் கையாள தொடர்பு, மின்னிலக்க விவகார அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதேவேளை, எங்கள் பயனர்களின் தனியுரிமையைக் காக்கவும் இந்தோனீசியர்களுக்கு எங்கள் தளம் பாதுகாப்பான, பொறுப்பான அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்யவும் நாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம்,” என்று டிக்டாக் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அறிக்கையில் தெரிவித்தது.

டிக்டாக்கின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக இந்தோனீசியா வெள்ளிக்கிழமை அறிவித்தது. விதிமுறைகளை மீறியதால் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

ஆகஸ்ட் 25ருந்து 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது தங்கள் பயனர் நடவடிக்கைகள் குறித்த முழு புள்ளிவிவரங்களை டிக்டாக் ஒப்படைக்க மறுத்தது. விநியோக ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

குறிப்புச் சொற்கள்