அமைச்சரவையில் தமது நிலை குறித்த ஆருடங்களை நிராகரித்தார் லோக்

அமைச்சரவையில் தமது நிலை குறித்த ஆருடங்களை நிராகரித்தார் லோக்

2 mins read
75edd3cc-d21c-4899-91c4-27f61fbb6693
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் டிஏபி-யின் முக்கியக் கூட்டத்துக்கு முன்னதாக, போக்குவரத்து அமைச்சு ஊழியர்களுடனான தமது கடைசி மாதாந்தரக் கூட்டமாக இது இருக்கலாம் என்ற யூகங்களை மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் சியூ ஃபூக் நிராகரித்தார். - படம்: மலாய் மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மத்திய அரசாங்கத்தில் தங்கள் கட்சி நீடிக்க வேண்டுமா என்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) முக்கிய வாக்கெடுப்புக்கு முன்னதாக, போக்குவரத்து அமைச்சு ஊழியர்களுடனான தமது கடைசி மாதாந்தரக் கூட்டமாக இது இருக்கலாம் என்ற யூகங்களை போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் சியூ ஃபூக் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) மறுத்துள்ளார்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற அமைச்சின் ஊழியர்களுடனான கூட்டம் அவருடைய கடைசி கூட்டமாக இருக்குமா என்று கேட்கப்பட்டபோது, ​​லோக் அந்த அனுமானத்தை நிராகரித்தார்.

தற்போதைய நாடாளுமன்றக் காலத்தின் எஞ்சிய பகுதிக்கு, கட்சியின் தலைவர்கள், அதன் அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தில் நீடிப்பார்களா என்பதற்கான ஒரு தீர்மானத்தின் மீது டிஏபி பிரதிநிதிகள் வாக்களிக்கும் மூன்று நாள்களுக்கு முன்பு லோக்கின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று டிஏபி-யின் தேசிய மாநாட்டில் இந்த ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும். இதில் சுமார் 4,000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானம், மத்திய அரசாங்கத்தில் டிஏபி-யின் பங்களிப்பு தொடர்பானது. இது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் நிலைப்பாடு சம்பந்தப்பட்டதல்ல.

கடந்த நவம்பரில் நடந்த சாபா தேர்தலில் போட்டியிட்ட எட்டு இடங்களிலும் தோல்வியடைந்ததையும், அதனைத் தொடர்ந்து ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானிலும் ஏற்பட்ட தோல்விகளையும் உள்ளடக்கி, டிஏபி, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான தேர்தல் பின்னடைவுகளைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த அண்மைய பின்னடைவில் பாதிக்கப்பட்டவர்களில் லோக்கும் ஒருவர். அவர் மூன்று முறை பதவி வகித்த தனது சென்னா மாநிலத் தொகுதியை இழந்தார்.

தேர்தல் தோல்விகள் இருந்தபோதிலும், டிஏபி அரசாங்கத்தில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்த முடிவு பிரதிநிதிகளிடமே விடப்படும் என்று லோக் முன்னதாகக் கூறியிருந்தார்.

தற்போது மத்திய அரசாங்கத்தில் டிஏபி ஐந்து அமைச்சர் பதவிகளையும் ஏழு துணை அமைச்சர் பதவிகளையும் வகிக்கிறது.

தங்கள் தலைவர்கள் அரசாங்கப் பதவிகளைத் துறக்குமாறு பிரதிநிதிகள் வாக்களித்தாலும், தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு டிஏபி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அக்கட்சி கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அன்வார்பங்களிப்புஅமைச்சரவை