லண்டனில் தாக்குதல்; வாளுடன் சுற்றித் திரிந்த ஆடவர் கைது

1 mins read
7aa76348-8977-4af4-8577-907465732c45
கையில் வாளுடன் இருந்த 36 வயது ஆடவரை லண்டன் பெருநகரக் காவல்துறை கைதுசெய்தது. - படங்கள்: ஊடகம்

லண்டன்: வடகிழக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) காலை வேளையில் ஆயுதத்தால் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்தது.

கைதுசெய்யப்பட்டபோது அந்த 36 வயது ஆடவரிடம் வாள் ஒன்று இருந்தது என்றும் இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.

ஹைனால்ட் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர், பொதுமக்கள் சிலரையும் காவல்துறை அதிகாரிகள் இருவரையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து, ஐவருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக லண்டன் அவசர மருத்துவ வாகனச் சேவை அமைப்பு ‘எக்ஸ்’ ஊடகம் வழியாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்