லண்டன்: லண்டன் மாநகரின் அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும் லண்டன் ஐ (London Eye) என்று அழைக்கப்படும் லண்டன் ராட்டினம் திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.
பிக் பென் (Big Ben), பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை உயரத்திலிருந்து பார்க்க லண்டன் ராட்டினத்தைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
லண்டனில் ஆக அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் பார்த்த இடங்களில் லண்டன் ராட்டினமும் ஒன்று.
கிட்டத்தட்ட 30 நிமிடங்களில் அந்த ராட்டினத்தில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருந்து லண்டனை உயரத்திலிருந்து கண்டு ரசிக்க முடியும்.
முதலில் லண்டன் ராட்டினம் திறக்கப்பட்டபோது அது ஐந்து ஆண்டுகள்தான் சேவையில் இருக்கும் என்றும் அதன் பின்னர் அது மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் அளித்த பேராதரவு அதை நிரந்தரமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.
ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் லண்டன் ராட்டினத்தில் ஏறி மகிழ்கின்றனர். லண்டன் ராட்டினத்தில் ஏற 50 வெள்ளி வசூலிக்கப்படுகிறது.