உரிமை கோரப்படாத 2,000 கொவிட் நோயாளிகளின் சடலங்களுக்கு இறுதி நிகழ்ச்சி

1 mins read
e8c8c072-48d1-4a6a-850c-8dd7ade331c0
தகனம் செய்யப்பட்ட சடலங்களின் எச்சங்கள் ஒரு சமூகக் கல்லறையில் புதைக்கப்பட்டன. - படம்: நியூயார்க் டைம்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவலின் முதல் ஆண்டில் அந்நோய் தாக்கி உயிரிழந்தோரில் உரிமை கோரப்படாத கிட்டத்தட்ட 2,000 சடலங்கள் வியாழக்கிழமை ( டிசம்பர் 14) புதைக்கப்பட்டன.

சமய, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் சிலரும் இதில் கலந்துகொண்டனர். தகனம் செய்யப்பட்ட சடலங்களின் எச்சங்கள் சமூக கல்லறையில் புதைக்கப்பட்டன.

வியாழக்கிழமை (டிசம்பர் 14) நடைபெற்ற இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் அப்பகுதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி எனவும் இது 1986ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு கொவிட்-19 கொள்ளை நோய் தாக்கி இறந்தவர்களில் துரதிர்ஷ்டவசமாக 1,937 குடியிருப்பாளர்களின் சடலங்களைக் கோருவதற்கு உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. அந்நிலையில் பிரிந்த உயிர்களைத்தான் நாம் இன்று நினைவுகூர்கிறோம்,’‘ என லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்டத்தின் மேற்பார்வையாளர் ஹில்டா சோலிஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்