பொதுச் சேவை துறை ஊழியர்களுக்கு குறைந்த வாடகையிலான வீடுகள்

பொதுச் சேவை துறை ஊழியர்களுக்கு குறைந்த வாடகையிலான வீடுகள்

1 mins read
1ccadca7-30b2-491d-9feb-644b62cfb9be
டெங்கிலில் உள்ள ஜாமேதுஸ் சோலேஹா பள்ளிவாசலில் மக்களைச் சந்திக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா

https://www.bernama.com/tam/news.php?id=2573365

டெங்கில்: பொதுச் சேவை துறை ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், குறைந்த வாடகையில் அவர்களுக்கான வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவிருக்கிறது.

அதிகரித்துவரும் வீட்டு வாடகைக் கட்டணங்கள் காரணமாக பல பொதுச் சேவை துறை ஊழியர்கள் கடுமையான பிரச்சினைகளைச் சந்தித்து வருவது, தாம் பல மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணத்தின் வழி தெரிய வந்ததாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

‘’நான் பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் செய்துள்ளேன். பொதுச் சேவை துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மிகவும் கடுமையானது. குறிப்பாக வாடகைக் கட்டணங்களின் உயர்வைக் குறிப்பிடலாம். நாங்கள் அவர்களின் சம்பளத்தை 15 முதல் அதிகபட்சமாக 30 விழுக்காடு வரை உயர்த்தினாலும், சில நேரங்களில் ஜோகூர் பாரு, கோலாலம்பூர், சிரம்பான், ஈப்போ ஆகிய மாநிலங்களில், இந்த உயர்ந்த வாடகைக் கட்டணங்களை ஈடுசெய்ய முடிவதில்லை,’’ என்று அவர் விவரித்தார்.

அடையாளம் காணப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி இம்முயற்சி விரைவுபடுத்தப்படும் என்று அன்வார் கூறினார். டெங்கிலில் உள்ள ஜாமேதுஸ் சோலேஹா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அன்வார்பொதுச் சேவைஊழியர்கள்