1,500 பேரை வேலைக்கு எடுக்கும் ‘யுஏஇ’ நிறுவனம்

1 mins read
8a273cad-5929-42a0-9b62-b87975b509ae
வரும் ஆண்டுகளில் ‘யுஏஇ’யின் பல பகுதிகளில் 50 திரையரங்குகளைத் திறக்க லூலு குழுமம் திட்டமிட்டுள்ளது. - படம்: ஊடகம்

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) வேலைக்கு ஆளெடுப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ‘யுஏஇ’யைத் தளமாகக் கொண்ட ‘லூலு குரூப் இன்டர்நேஷனல்’ நிறுவனம், திரையரங்குகளை நடத்த ‘ஸ்டார் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் ‘யுஏஇ’யின் பல பகுதிகளில் 50 திரையரங்குகளைத் திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்திரையரங்குகளில் அரபு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.

“கடைத்தொகுதிகளில் ஏற்கெனவே திரையரங்குகளைக் கொண்டுள்ளோம். இப்போது, ஸ்டார் சினிமாசுடன் இணைந்து அத்தொழிலை விரிவுபடுத்தவுள்ளோம்,” என்றார் லூலு குழுமத்தின் செயல் இயக்குநர் அஷ்ரஃப் அலி.

இதனையடுத்து, ஒரு திரையரங்கிற்கு 25-30 பேர் தேவைப்படலாம் என்ற வகையில், 1,500 பேர்வரை ஆளெடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்