கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, தேசிய இதயக் கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
99 வயது மகாதீருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு மகாதீர் இவ்வாரம் தொடக்கத்தில் இருந்து அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியளித்து வருகிறார்.
தற்போதைய துணைப் பிரதமர் சாஹித் ஹமிடி மீது அவதூறு பரப்பியதாக மகாதீர் கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தார். அக்டோபர் 16, 17 நடக்க வேண்டிய வழக்கு விசாரணை தற்போது அக்டோபர் 29, 30க்கு மாற்றப்பட்டுள்ளது.
திரு மகாதீர் அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றம் வரமாட்டார், அவர் மருத்துவ விடுப்பில் உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் உறுதிபடுத்தினார்.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்னோ கட்சி சந்திப்பில் திரு சாஹித் தம்மீது அவதூறு பரப்பியதாகத் தெரிவித்தார். தான் பிறப்பால் மலாய் அல்லது முஸ்லிம் இல்லை என்று கூட்டத்தில் அவதூறு பரப்பியதாக மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

