தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறாக சென்ற வித்தை; சிறுவன் தலையில் விழுந்த பரோட்டா (காணொளி)

1 mins read
3047465e-8261-4f67-b478-b09a66fadb16
படம்: டிக்டாக் / சமூக ஊடகம் -

மலேசியாவில் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அடில் நூர் இமான் என்னும் சிறுவன் பரோட்டாவை வைத்துக்கொண்டு வித்தை காட்டுவான்.

அவனது பரோட்டா வீசும் வித்தை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம்.

எப்போதும் போல் பரோட்டாவை வைத்து வித்தை செய்துகொண்டிருந்த போது, பரோட்டா சற்று கூடுதலாக சுழன்று மேசையில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவனின் தலையில் பறந்து போய் விழுந்தது.

அது தொடர்பான காணொளி டிக்டாக் தளத்தில் பகிரப்பட்டது. அது தற்போது 1.4 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுவருகிறது.

சம்பவம் மே 7ஆம் தேதி நடந்ததாகவும், அது பெராக்கில் உள்ள உணவகம் என்றும் கூறப்படுகிறது.

காணொளியில் அடில் எப்போதும் போல் வித்தை செய்தார் ஆனால் இம்முறை எதிர்பாரா விதமாக அருகில் இருந்த சிறுவன் முகத்தில் போய் அது மூடியது.

வித்தை தவறாக சென்றதைக் கண்டு உணவகத்தில் இருந்த அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.

நடந்த தவறுக்காக அடில் அந்த சிறுவனுக்கு மற்றொரு வித்தை செய்து காட்டினார்.

View post on TikTok
குறிப்புச் சொற்கள்