ஜோகூரில் S$712.9 மில்லியன் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா

ஜோகூரில் S$712.9 மில்லியன் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா

2 mins read
321d8e3d-2605-4158-a357-6eb65084a4bd
பிரபலச் சொத்து மேம்பாட்டு நிறுவனமான மா சிங் குழுமம், ‘எம்எஸ் இண்டஸ்ட்ரியல் பார்க் @ குலாய்’ எனும் ஒருங்கிணைந்த தொழில் பூங்காவை ஜோகூரில் அமைக்கிறது. - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: ஜோகூரில் கிட்டத்தட்ட 2.26 பில்லியன் ரிங்கிட் (S$712.9 மில்லியன்) மதிப்பிலான ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

பிரபலச் சொத்து மேம்பாட்டு நிறுவனமான மா சிங் குழுமம், ‘எம்எஸ் இண்டஸ்ட்ரியல் பார்க்@குலாய்’ எனும் அந்தத் தொழில் பூங்கா குலாயில் அமைக்கிறது.

அதற்காக, 273.87 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 169.63 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்குவதற்கு நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில், நிறுவனத்தின் பங்களிப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி, தளவாடங்கள், தொழில்நுட்பம், மின்னிலக்க உள்கட்டமைப்புத் துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் அத்திட்டம் உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்திட்டத்தை மா சிங் குழுமத்தின் 60 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்ட எம் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் நிறுவனம், கேஎல்கே லேண்ட் நிறுவனத்துடன் (40 விழுக்காடு பங்குகள்) இணைந்து செயல்படுத்தும்.

தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, அங்குப் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் கட்டப்படும். நிலக் கொள்முதல் 2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நிறைவடையும் என்றும் அதன் பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்கந்தர் மலேசியா பகுதிக்குள் அமைந்துள்ள அந்தத் திட்டம், செனாய் அனைத்துலக விமான நிலையம், தஞ்சோங் பெலெபாஸ், ஜோகூர் துறைமுகங்கள், வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, செனாய்-தேசாரு விரைவுசாலை, சிங்கப்பூருக்கான இரண்டாவது இணைப்புப் பாதை ஆகியவற்றிற்கு அருகில் அமைந்திருக்கிறது.

ஜோகூரில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கான நிலக் கொள்முதல் பணிகள் 2026ன் நான்காம் காலாண்டில் நிறைவடையும் என்றும் அதன்பின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூரில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கான நிலக் கொள்முதல் பணிகள் 2026ன் நான்காம் காலாண்டில் நிறைவடையும் என்றும் அதன்பின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: எட்ஜ் மலேசியா

அத்திட்டத்தில் குழுமங்கள், தனித்தனி தொழிற்சாலைகள் ஆகியவற்றுடன் ஒரு ஏக்கர் முதல் எட்டு ஏக்கர் வரையிலான தொழில்துறை நிலப்பகுதிகள் இடம்பெறும்.

அந்த நிலப்பகுதிகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய தொழில்துறை வசதிகள், விநியோக மையங்கள், தரவு மையங்களின் மேம்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும் என்று மா சிங் கூறினார்.

2000ஆம் ஆண்டு முதல் ஜோகூரில் இயங்கி வரும் மா சிங், அங்கு கிட்டத்தட்ட 4.47 பில்லியன் ரிங்கிட் ஒட்டுமொத்த மேம்பாட்டு மதிப்பிலாக குடியிருப்பு நகரங்கள், தொழில்துறை திட்டங்களை நிறைவு செய்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

எம் கிராண்ட் மிநோரி, எம் மிநோரி, மெரிடின் ஈஸ்ட், எம் தியாரா 2, தியாரா ஹில்ஸ் உள்ளிட்ட ஜோகூரில் செயல்படும், வரவிருக்கும் திட்டங்கள், மொத்தம் ஏறக்குறைய 11.62 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மேம்பாட்டு மதிப்பைக் கொண்டுள்ளன என்றும் அறிக்கை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்