ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்கி 26 மணி நேரத்துக்குத் தண்ணீர் விநியோகத் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 30,000க்கும் அதிகமான பயனீட்டாளர்கள் பாதிப்படைவர் என்று அதிகாரிகள் கூறினர்.
பாசிர் கூடாங்கில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் விநியோகத் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தடையில்லாமல் தண்ணீர் விநியோகம் தேவைப்படும் இடங்களுக்கு தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும். மருத்துவமனைகள், ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.
தண்ணீர் விநியோகக் கட்டமைப்பை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க இந்தப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.