ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய்க் கப்பல்கள் பெரும் சரிவு

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய்க் கப்பல்கள் பெரும் சரிவு

1 mins read
360bd79b-0627-4a22-a031-33a0bc45a216
செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) எடுக்கப்பட்ட படத்தில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய்க் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 23) ஒரே ஒரு எண்ணெய்க் கப்பல் நீரிணையைக் கடந்தது. அன்றைய தினம் எந்தக் கப்பலும் நீரிணைக்குள் நுழையவில்லை. இது, கடந்த மே 7ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

மத்திய கிழக்கில் நிலவும் கடல்வழிப் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு US$100ஆக மீண்டும் உயர்ந்துள்ளது. ஈரான்மீது தான் தொடர்ச்சியாக 13வது இரவாகத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் பாஸ்ரா கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற ‘நியூ ஜயண்ட்’ என்ற மாபெரும் எண்ணெய்க் கப்பல் மட்டுமே வியாழக்கிழமை நீரிணையைக் கடந்து வெளியேறியது. அக்கப்பல் ஆகஸ்ட் நடுப்பகுதியில் சீனாவின் ரிழாவ் துறைமுகத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், பாப் எல்-மாண்டெப் நீரிணையில் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து 32ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் ஒன்பது கப்பல்கள் கச்சா எண்ணெய்யைச் சுமந்து சென்றன.

இருப்பினும், பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாகச் சில கப்பல்கள் சூயெஸ் கால்வாய் வழியாகப் பயணிக்கின்றன. இதனால், பயண நேரம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கும். இதன் காரணமாக சவூதி அராம்கோ நிறுவனம், எகிப்தின் சிடி கெரிர் துறைமுகம் வழியாக எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்