நைரோபி: கென்யாவில் டிசம்பர் 16ஆம் தேதியன்று மிக மோசமான மின்தடை ஏற்பட்டது.
கென்யாவில் பெரும்பாலான இடங்கள் மின்தடையால் பாதிப்படைந்தன.
கடந்த ஓராண்டாக கென்யாவில் தொடர்ச்சியாகப் பலமுறை மின்தடை ஏற்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கென்யா அதிகாரிகள் கூறினர்.
மின்தடை காரணமாக கென்யாவெங்கும் இணையச் சேவை தடைப்பட்டது.
கென்யாவின் அண்டை நாடான டன்சேனியாவையும் மின்தடை பாதித்தது.