மலேசியாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு புதன்கிழமை (ஏப்ரல் 27) அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
"சுகாதார அமைச்சு இந்த விவகாரம் குறித்து முழுமையாக கலந்தாலோசித்தது. அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் இது குறித்த அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம்," என்று செய்தியாளர்களிடம் திரு கைரி நேற்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படுவதற்குமுன் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த விவகாரத்தில் அமைச்சு மிகவும் கவனமாக உள்ளது.
"பெருந்தொற்றை நாங்கள் சிறப்பாக சமாளித்து வந்துள்ளதால், இதில் தவறான படியை எடுத்துவைக்க நாங்கள் விரும்பவில்லை. தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதுடன், மருத்துவமனைகளில் அழுத்தமும் குறைந்துள்ளது.
கொவிட்-19 தொற்றை நிரந்தர நோயாகக் கருதும் மலேசியா, கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.

