எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை ஆராயவுள்ள மலேசியா

எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை ஆராயவுள்ள மலேசியா

1 mins read
0055f0fd-9db0-4b4d-b327-4b61d37225b7
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தா. - படம்: பஜாக்கு

ஜோகூர் பாரு: மலேசியாவின் எண்ணெய் விநியோகப் பாதுகாப்பையும் உலகளவில் தொடரும் எரிசக்தி தடைகளால் ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்பையும் மலேசியா ஆராயவுள்ளது.

எதிர்வரும் தேசியப் பொருளியல் செயல் மன்றத்தின் (எம்டிஇஎன்) சந்திப்பில் அந்த அம்சங்கள் ஆராயப்படும் என்று மலேசியாவின் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நாசர் கூறியதாக தி ஸ்டார் ஊடகம் தெரிவித்துள்ளது.

“எண்ணெய் விநியோகத்தைப் பொறுத்தவரை நாட்டின் திறன் குறித்து ஆராய்வோம். மலேசியாவுக்கான விநியோகப் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுவோம்,” என்று திரு அக்மல் நஸ்ருல்லா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையே, நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களையொட்டி பயணங்கள் அதிகரிக்கவிருக்கும் வேளையில், ஈரான் போரால் இந்தோனீசியா எரிபொருள் விலை சார்ந்த சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் காலத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான இந்தோனீசியர்கள் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நேரத்தில் ஈரான் போரால் வட்டார அளவில் எரிபொருள் விலை அதிகரித்து வருவதை ஜகார்த்தா சிக்கலாகப் பார்க்கிறது.

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதம் நிறைவடையும்போது இந்தோனீசிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி தற்காலிகப் பயணங்களை மேற்கொள்வதுண்டு. நோன்புப் பெருநாள் இவ்வார இறுதியில் வருகிறது.

குறிப்புச் சொற்கள்