தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் 3,000 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

2 mins read
2e2e3a4d-7243-4d43-a70c-f90c22264ab2
செராசில் சட்டவிரோமாகச் செயல்பட்ட கோழி இறைச்சி கூடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. - கோப்புப் படம்: பெர்னாமா

சேரஸ்: மலேசியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கூடங்களிலிருந்து 3,000 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

செராசில் உள்ள அந்தக் கிடங்குகளில் வியாழக்கிழமை (மார்ச் 13) அதிகாலை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையும் (ஜாகிம்) இரண்டு சட்டவிரோத கோழி இறைச்சி வளாகங்களில் சோதனை நடத்தின. இதில் இறைச்சி வளாகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாலை 1 மணி அளவில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, அசுத்தமான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் தரையில் கோழி இறைச்சி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமார் 28,000 ரிங்கிட் மதிப்புள்ள 3,000 கிலோவிற்கும் அதிகமான கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. ஜனவரி மாதம் இரண்டு வளாகங்களையும் மூட உத்தரவிட்டு அறிவிப்புகளை அதிகாரிகள் அனுப்பியதாக அமைச்சின் கோலாலம்பூர் இயக்குநர் முகமட் சப்ரி செமான் தெரிவித்தார். இந்தச் சம்பவம், வர்த்தக, விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செயல்பட்ட இறைச்சிக் கூடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அவர்களும் இறைச்சிக் கூடங்களில் அன்றாட நடைமுறைகளில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா, பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டு ஊழியர்கள் மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஹலால் சான்றிதழ் மற்றும் முத்திரை விதிகளை மீறியதற்காக ஜாகிம் அமைப்பு இரு வளாகங்களையும் விசாரிக்கும் என்று முகமட் சப்ரி கூறினார்.

இதற்கிடையே, உள்துறை அமைச்சு ஜாகிமுடன் சேர்ந்து மார்ச் 2ஆம் தேதியிலிருந்து 11 உள்ளூர் ஹோட்டல்களில் ஹலால் உணவுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று சோதனை நடத்தியது.

குறிப்புச் சொற்கள்