கல்நார் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வது குறித்து மலேசியா பரிசீலனை

1 mins read
142582fb-007f-4138-8e09-b3e7801b9d3d
மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமது. - படம்: மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு

கோலாலம்பூர்: கல்நார் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அந்நாட்டின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.

மக்களின் உடல்நலத்துக்குக் கல்நார் கேடு விளைவிக்கக்கூடியது.

இருப்பினும், அது மலேசியாவில் பேரளவில் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின்கீழ் இந்த விவகாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்து ஆராயப்படும் என்றார் அமைச்சர் நிக் நாஸ்மி.

தேவை ஏற்பட்டால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தொழிற்துறையில் கல்நார் பயன்பாடு குறித்தும் சுற்றுப்புறம் மற்றும் உடல்நலத்துக்கு அதனால் ஏற்படும் தாக்கம் குறித்தும் மலேசியாவின் சுற்றுப்புறத்துறை ஆராய்ந்து வருவதாகத் திரு நிக் நாஸ்மி கூறினார்.

கல்நார் நச்சுத்தன்மை வாய்ந்தது.

அது நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி ஃபின்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து உட்பட 69 நாடுகளில் கல்நார் தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்