மலாக்கா - மலாக்காவின் குருபொங் நகரில் மக்கள் குடியிருப்புத் திட்டக் கட்டடத்தில் நான்கு வயது சிறுவன் மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான். அந்தச் சிறுவன் லைட்டரை வைத்து விளையாடியதாக நம்பப்படுகிறது என்று மலாக்கா மாநில தீயணைப்பு, மீட்புப் பிரிவு தெரிவித்தது.
மே 16ஆம் தேதி அசம்பாவிதம் நடப்பதற்கு முன் பிற்பகல் 2.20 மணிவாக்கில் தனது மகன் லைட்டரை வைத்து விளையாடியதாக மாண்ட சிறுவனும் தாய் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக மூத்த தீயணைப்பு சூப்பரின்டென்டண்ட் கூறினார்.
ஐந்து பிள்ளைகளில் நான்காவதான சிறுவன், கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்த மூன்றாவது படுக்கறையில் மாண்ட நிலையில் காணப்பட்டான். தரையில் இருந்த அவனது உடலில் தீக்காயங்கள் இருந்தன.
எனினும் மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணை தொடர்கிறது என்ற அதிகாரிகள், மேல் நடவடிக்கைகளுக்காக சிறுவனின் உடல் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டனர்.

