தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை முன்னுரைப்பு

1 mins read
1410d1d7-63de-43d7-aca0-f33f4873fd8a
பேராக், பாகாங், சிலாங்கூர், ஜோகூர், சாபா, சரவாக், லாபுவான் ஆகியவற்றில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இணையம்

பெட்டாலிங் ஜெயா: பாகாங், ஜோகூர் உட்பட மலேசியாவின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதுடன் பலத்த காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பேராக், பாகாங், சிலாங்கூர், ஜோகூர், சாபா, சரவாக், லாபுவான் ஆகியவற்றில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) பிற்பகல் 2.15 மணிக்கு மலேசிய வானிலை மையம் கூறியது.

பேராக்கில் உள்ள ஹிலிர் பேராக், பாதாங் பாடாங், முவாலிம், பாகாங்கில் உள்ள ரொம்பின், சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், ஜோகூரில் உள்ள பத்து பகாட், குளுவாங், மெர்சிங், பொன்தியான், கூலாய், ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்