தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா எரிவாயுக் குழாய் வெடிப்பு: கட்டட வேலை நடந்ததைக் காட்டும் காணொளிகள்

2 mins read
27233bb0-6239-4f28-aec5-aaff94217f37
கார் கேமராவில் பதிவானவை டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டன. - படம்: @MIIRAAHZ/TIKTOK

ஷா ஆலம்: சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏப்ரல் 1ஆம் தேதி எரிவாயுக் குழாய் வெடிப்பதற்கு முன்னர், அந்தப் பகுதியில் நிக அகழ்வுப் பணிகள் நடைபெற்றதைக் காட்டும் காணொளிகள் வெளியாகி உள்ளன.

மார்ச் 28 மற்றும் 30 தேதிகளில் கார் கேமரா ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அந்த நில அகழ்வுப் பணிகள் நடைபெற்றதைக் காணமுடிந்ததாக மலாய் நாளிதழான சினார் ஹரியான் தெரிவித்தது.

அந்த 41 வினாடி காணொளி டிக்டாக் ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அறிவிப்புப் பலகை எதுவும் வைக்கப்படாமல் நிலத்தில் குழிதோண்டும் பணிகள் நடைபெற்றதைக் காட்டும் காணொளிகளை ஏப்ரல் 3ஆம் தேதி காலை வரை 1.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்கள் இருக்கும் இடத்திற்கு அருகே கட்டட வேலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கட்டட வேலைகளுக்காகக் குழி தோண்டப்படும்போது குழாய்கள் சேதமடைந்து வெடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கட்டட ஒப்பந்ததாரரை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

கட்டட வேலை நடந்ததாகக் கூறப்படும் அந்த இடம் பெட்ரோனாசுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி.

அந்த இடத்தில் கட்டட வேலை செய்வதற்கான உரி[Ϟ]மத்தை ஒப்பந்ததாரர் வைத்திருந்தாரா என்றும் விசாரிக்கப்படுகிறது.

பசுமையுடன் காட்சியளித்த அந்த அருமையான நிலப் பகுதி எரிவாயுக் குழாய் தீச்சம்பவத்திற்குப் பின்னர் சீர்குலைந்துவிட்டதாக டிக்டாக் பயனாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயுக் குழாயில் பற்றிய தீ, 500 மீட்டர் பரப்பளவுக்குப் பரவி எரிந்ததில் புத்ரா ஹைட்ஸில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில வாகனங்களும் சேதமுற்றன.

அந்தத் தீச்சம்பவம் குறித்து சிலாங்கூர் அரசாங்கம் உடனே சுயேச்சையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இகற்கிடையே, புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தற்காலிகமாக கொடுத்து உதவ கூடுதல் வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

“எத்தனை வாகனங்கள் தேவைப்படலாம் என்பதையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் தற்காலிக வாகனங்களை வழங்க மற்ற நிறுவனங்களைத் தொடர்புகொண்டுள்ளோம்,” என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 3) புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் சாலைப் போக்குவரத்துத் துறை அமைத்திருந்த நடமாடும் முகப்புகளைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்