மலேசியா: செயற்கை மழைக்குத் திட்டமில்லை

கோலாலம்பூர்: மலேசியாவில் காற்றுத்தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

அதைச சமாளிக்கச் செயற்கை மழை பொழிய வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், பள்ளிகள் மூடப்படும் என்பன போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், மலேசியா தொடர்ந்து காற்றின் தரத்தைக் கண்காணித்து வருவதால் செயற்கையாக மழை பொழிய வைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 24 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுத் தூய்மைக்கேடுக் குறியீடு 150க்குமேல் இருக்கும் பகுதிகளில் மட்டுமே செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு இயற்கை வள, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறைகளுக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறியுள்ளார்.

“செயற்கையாக மழை பொழிய வைக்கும் திட்டம் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும். மேலும், நாங்கள் காற்றின் தரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் சொன்னார்.

“தேசிய புகைமூட்டச் செயல்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் உள்ளிட்ட மற்ற அமைப்புகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அத்திட்டம் பட்டியலிடுகிறது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

காற்றுத் தூய்மைக்கேடடுக் குறியீடு கோலாலம்பூரின் செராஸ் பகுதியில் 153ஆகவும் நிலாய் பகுதியில் 154ஆகவும் பதிவாகியிருந்ததாக மலேசியாவின் வானிலை நிலைய இணையத்தளத்தில் செவ்வாய்க்கிழமை 7 மணிக்கு வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!