20 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா ஏற்று நடத்தும் ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா ஏற்று நடத்தும் ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

1 mins read
521da91d-63b0-4bf0-ba05-cf6f54fd2a67
கடந்த 2004ஆம் ஆண்டில் ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: செப்டம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 17வது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்களை மலேசியா ஏற்று நடத்தவுள்ளது.

மலேசிய சுகாதார அமைச்சு தனது ஃபேஸ்புக் பதிவில், “இந்தச் சுகாதாரக் கூட்டம், ‘ஆரோக்கியமான ஆசியான்: சமத்துவமான, எதிர்காலத்திற்குத் தயாரான சுகாதார அமைப்புகளை நோக்கி ஒன்றிணைந்து’ என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும்,” என்று கூறியுள்ளது.

“மேலும் சமத்துவமான, மீள்திறன் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான ஆசியான் சுகாதார அமைப்பை நோக்கிய முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிப்போம்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியா கடைசியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 2004ல் பினாங்கில் நடைபெற்ற 7வது சுகாதார அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்களை நடத்தியிருந்தது.

பொதுச் சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வட்டார சுகாதாரச் சவால்களை முழுமையாகக் கையாள்வதற்கும் இந்த கூட்டம் ஒரு முக்கியத் தளமாக விளங்குகிறது என்று பெர்னாமா கூறியது.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்சுகாதார அமைச்சுமலேசியா