புகைமூட்டத்துக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கத் திட்டமில்லை: மலேசியா

புகைமூட்டத்துக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கத் திட்டமில்லை: மலேசியா

படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2026 - 9:59 am

1 mins read

சிரம்பான்: எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கையாள மலேசியா, இந்தோனீசியாவுடன் தொடர்ந்து அரசதந்திர வழிமுறைகளையும் ஆசியான் கூட்டமைப்பு நடைமுறைகளையும் கையாளும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் தெரிவித்துள்ளார்.

மக்களின் அக்கறைகளுக்கும் சுகாதாரத்துக்கும் முன்னுரிமை வழங்கும், கட்டங்கட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ள அணுகுமுறையைக் (phased approach) கொண்டு அவ்வாறு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகள் சம்பந்தப்பட்ட, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களைக் கையாள்வதற்கு சட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுப்பது அல்லது அரசதந்திரரீதியாகக் கடிதங்கள் அனுப்புவதற்குப் பதிலாக தலைவர்களுக்கு இடையேயும் வட்டார அளவில் உள்ள வழிகள் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்துவதையே தாங்கள் விரும்புவதாக திரு முகம்மது கூறினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாபுகைமூட்டம்வெளியுறவு அமைச்சர்காற்றுத்தரம்பருவநிலை