தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் ‘இஆர்பி’யை முன்மாதிரியாகக் கொண்ட தடையற்ற சாலைக் கட்டண முறைக்கு மலேசியா திட்டம்

1 mins read
598b275d-028b-44c0-9187-d42828b7cd42
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வாகனப் பதிவு எண்ணைத் தானியங்கி முறையில் அடையாளம் காணும் முறை சோதனையிடப்படும்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: தடையற்ற சாலைக் கட்டண முறையை மலேசியா கூடிய விரைவில் அறிமுகப்படுத்தக்கூடும். அந்நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் சாலைக் கட்டண வசூல் முறையைத் துரிதப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சிங்கப்பூரின் ‘இஆர்பி’ எனப்படும் மின்னியல் சாலைக் கட்டண முறையை முன்மாதிரியாகக் கொண்ட புதிய தடையற்ற சாலைக் கட்டண முறையை அமைப்பது தொடர்பாக மலேசியா பரிசீலனை செய்து வருகிறது.

இதுதொடர்பாக, மலேசியாவின் நெடுஞ்சாலைகளை நிர்வகித்து வரும் ஆகப் பெரிய நிறுவனமான பிளஸ் மலேசியா, பல சோதனைத் திட்டங்களை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வாகனப் பதிவு எண்ணைத் தானியங்கி முறையில் அடையாளம் காணும் முறையை அது சோதனையிட இருக்கிறது.

இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைத்திட்டம் வெற்றிகரமானதாக அமைந்தால் 2027ஆம் ஆண்டுக்குள் அந்தத் தடையற்ற சாலைக் கட்டண முறை நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்படும்.

டச் அண்ட் கோ, சிஐஎம்பி ஆகியவை இடையிலான ஒத்துழைப்பின்கீழ் மற்றொரு சோதனைத் திட்டம் கெமுனிங் - ஷா அலாம் விரைவுச்சாலையில் நடத்தப்படுகிறது. அந்த முறையின்கீழ் பல மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயில்களும் அவை தொடர்பான உள்கட்டமைப்புகளும் பொருத்தப்படும் என்று மலேசியாவின் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் அகமது மஸ்லான் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்