கோலாலம்பூர்: மலேசிய மக்கள்தொகை வரும் ஆண்டுகளில் சீராக வளர்ச்சியடையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு தரவுகள்படி மலேசிய மக்கள் தொகை 32.45 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2060ஆண்டு 42.37ஆக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவரங்களை மலேசியாவின் புள்ளிவிவரத்துறை வெளியிட்டது.
புள்ளிவிவரத் துறையின் தரவுபடி 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் மக்கள்தொகை 36.49 மில்லியனாக உயரலாம்.
அதேபோல் 2040ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 39.78 மில்லியனாக மாறக்கூடும். 2050ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 41.79 மில்லியனாகக் கூடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2030க்கும் 2060க்கும் இடையில் மலேசிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.5 விழுக்காடாக இருக்கும் என்றும் அதன் பின்னர் அது சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சரிவில் சீன, இந்தியச் சமூகம்
தரவுகள்படி மலாய் சமூகத்தினர் எண்ணிக்கை 2060ஆம் ஆண்டு 79.4 விழுக்காடாக உயரக்கூடும். 2030ஆம் ஆண்டு அது 71.8 விழுக்காடாக இருக்கும்.
அதேபோல் சீன சமூகத்தினர் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில் 21.1 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் 2060ல் அந்த எண்ணிக்கை 14.8 விழுக்காடாகச் சரியும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதே காலகட்டத்தில் இந்தியச் சமூகத்தினரின் மக்கள் தொகையும் சரிவைச் சந்திக்கும். 2030ல் 4.7 விழுக்காடாக இருக்கும் அது 2060ல் 4.7 விழுக்காடாகக் குறையும்.
ஆண்-பெண் சமநிலையில் சிக்கல்
2059ஆம் ஆண்டுமுதல் மலேசியாவின் மக்கள் தொகை சரிவுக்கு முக்கிய காரணமாக ஆண்-பெண் சமநிலையில் உள்ள வேறுபாடு என்று கணிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டு 100 பெண்களுக்கு 112 ஆண்கள் இருப்பார்கள். 2060ஆம் ஆண்டு 100 பெண்களுக்கு 114 ஆண்கள் இருப்பார்கள்
2060ஆம் ஆண்டு மலேசியாவில் 22.5 மில்லியன் ஆண்கள் இருப்பார்கள். அதேநேரம் 19.8 மில்லியன் பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.