150 வெளிநாட்டவர் மரணம்: விசாரணை நடத்த மலேசியாவுக்கு நெருக்குதல்

150 வெளிநாட்டவர் மரணம்: விசாரணை நடத்த மலேசியாவுக்கு நெருக்குதல்

1 mins read
f3c83017-54e9-4a7d-bd63-55065b6023cc
தகுந்த உரிமம் இல்லாத மில்லியன்கணக்கான வெளிநாட்டவர் மலேசியாவில் இருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் தடுப்புக்காவல் நிலையங்களில் இருந்த ஏழு சிறுவர்கள் உட்பட 150 பேர் சென்ற ஆண்டு மாண்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதன் தொடர்பில் தடுப்புக் காவல் நிலையங்களின் நிலைமையை ஆராய விசாரணை நடத்துமாறு மனித உரிமைக் குழுக்கள் மலேசியாவை நெருக்குகின்றன.

அகதிகள் உட்பட தகுந்த உரிமமின்றி நாட்டுக்குள் வருவோரை மலேசியா அடிக்கடி தடுத்து வைப்பதுண்டு. தகுந்த உரிமம் இல்லாத மில்லியன்கணக்கான வெளிநாட்டவர் மலேசியாவில் இருக்கின்றனர்.