இஸ்லாமியப் பொருளியல்: முதலிடத்தைத் தக்கவைத்தது மலேசியா

1 mins read
1da47d95-4e4c-4fd3-8779-f52c2862a2e6
உலகளாவிய இஸ்லாமியப் பொருளியல் குறியீட்டில் தொடர்ந்து 10வது ஆண்டாக மலேசியா முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: உலகளாவிய இஸ்லாமியப் பொருளியல் குறியீட்டில் தொடர்ந்து 10வது ஆண்டாக மலேசியா முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

81 நாடுகள் இடம்பெறும் உலகத் தரவரிசையில் மலேசியாவுக்கு அடுத்த நிலைகளில் சவூதி அரேபியா, இந்தோனீசியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளன.

உலகளாவிய இஸ்லாமியப் பொருளியல் நிலை அறிக்கை 2013ல் தொடங்கப்பட்டதில் இருந்து இஸ்லாமியப் பொருளியலுக்கு மலேசியாவின் தொடர் கடப்பாட்டை இது பறைசாற்றுவதாக ஹலால் மேம்பாட்டுக் கழகத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருண் கூறினார்.

“2023 அறிக்கையில் இஸ்லாமிய நிதி, ஹலால் உணவு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் மலேசியா முதலிடம் பிடித்தது,” என்றார் அவர்.

2022ல் உணவு, மருந்துத் தயாரிப்பு, அழகு சாதனம், ஆடை அலங்காரம், பயணம், ஊடகம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் US$2.29 டிரில்லியன் (10.5 டி. ரிங்கிட்) செலவு செய்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்