கோலாலம்பூர்: புதிய விமான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது.
மலிவுக் கட்டணத்தில் விமானச் சேவை வழங்கிய ‘மைஏர்லைன்’ நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக தன் செயல்பாடுகளை நிறுத்தியது.
இதனால் பயணிகள் பேரளவில் பாதிக்கப்பட்டனர்.
அதனைக் கருத்தில்கொண்டு, விமான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளில் மாற்றம் செய்யவுள்ளதாக மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.
விமானச் சேவை உரிமத்திற்குப் புதிதாக விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் திறமையையும் நிதி நிலைமையையும் உறுதிசெய்யும் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அக்டோபர் 2ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த நிறுவனங்களின் பின்னணிகளை ஆராய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.