வூஹான் பயணிகளுக்கு மலேசியா தடை

வூஹான் பயணிகளுக்கு மலேசியா தடை

1 mins read
53b4611e-67e7-4025-b588-31d38b5212a1
மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளின் உடல் வெப்பநிலை கணினி மூலம்  தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. படம்: இபிஏ-இஎப்ஏ -

சில நாடுகள் வூஹானில் இருந்து வரும் விமானங்களையும் பயணிகளையும் தடை செய்துள்ளன. இந்நிலையில் வூஹான், ஹுபெய் மாகாணத்தைச் சுற்றி இருக்கும் இடங்களில் இருந்து வரும் சீனப் பயணிகளுக்கு மலேசியா நேற்று தற்காலிக தடை விதித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

முன்னதாக, வூஹானில் இருந்து மலேசியாவிற்கு வந்த நான்கு சுற்று பயணிகளுக்கு கிருமித்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

அதேபோல், தைவான் நாட்டினரை மணந்தவர்கள், தொழில் நிமித்தமாக வருபவர்களைத் தவிர, சீனாவில் இருந்து வரும் மற்றவர்களுக்கு அந்நாடு தற்காலிக தடை விதித்துள்ளது.

முன்னதாக, குழுவாக சுற்றுலா வந்த சீன நாட்டவர்களுக்கு அந்நாடு தடை விதித்து இருந்தது.