மலையேறிகள் மீட்புச் செலவுகளைக் குறைக்க விதிகளில் மலேசியா தீவிரக் கெடுபிடி

மலையேறிகள் மீட்புச் செலவுகளைக் குறைக்க விதிகளில் மலேசியா தீவிரக் கெடுபிடி

1 mins read
863de185-6dc2-44d9-863e-533f0cb5c714
காணாமல்போனோரைத் தேடி மீட்கும் மீட்புப் பணிகளுக்காக மில்லியன்கணக்கான ரிங்கிட் தொகையை மலேசியத் தற்காப்பு அமைச்சு செலவிடுகிறது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய மலைகளில் சிக்கித் தவிக்கும் மலையேறிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கத்துக்கு அதிகச் செலவு ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க மலையேற்ற விதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட உள்ளன.

காணாமல்போனோரைத் தேடி மீட்கும் மீட்புப் பணிகளுக்காக மில்லியன்கணக்கான ரிங்கிட் தொகையை மலேசியத் தற்காப்பு அமைச்சு செலவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில், மலையேறிகளின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் வீண் செலவுகளையும் குறைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால், மலையேறிகள் உரிய முன்அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய தற்காப்பு விதிகளும் கட்டுப்பாடுகளும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன. மேலும், மலையேற்றத்தில் ஈடுபடுவோர் தங்கள் பாதுகாப்புக்குத் தாங்களே பொறுப்பேற்கும் வகையில், அவர்கள் முயற்சியுடன் செயல்படுவதை அரசாங்கம் உறுதிசெய்யவுள்ளது.

தவிர, வழிகாட்டிகளின்றி செல்லும் பயணிகளால் நேரும் ஆபத்துகளைத் தவிர்க்கவும் உரிய பயிற்சி பெற்ற வழிகாட்டிகளை அமர்த்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது. மலையேறுபவர்கள் வழிகாட்டிகளின்றி தன்னிச்சையாகச் சென்று சிக்கிக்கொள்வதைக் தடுக்கவே இத்தகைய தீவிரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

வழிகாட்டிகளின் துணையோடு முறையான முன்அனுமதி பெற்று மலையேற்றத்தில் ஈடுபடுவதன் மூலம், தேவையற்ற விபத்துகளையும் அரசாங்கத்தின் நிதி விரயத்தையும் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்