கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது மழைக்காலம்.
இந்நிலையில், நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மூழ்கி மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் மட்டும் 19 பேர் நீர்நிலைகளில் மூழ்கி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, கடல் மற்றும் நீர்நிலை அருகில் உள்ள சுற்றுப்பயணத் தளங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று சுற்றுப்பயணிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில் மலேசியாவெங்கும் 258 பேர் நீர்நிலைகளில் மூழ்கி மாண்டதாக மலேசியத் தீயணைப்பு, மீட்புத்துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் முகம்மது தெரிவித்தார்.
மாண்டோரில் 32 பேர் பெண்கள்.
“நீர்நிலைகளில் மூழ்கி மாண்டோர் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது. அவ்வாறு மாண்டோரில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைந்தவர்கள்,” என்று திரு நூர் ஹிஷாம் கூறினார்.

