இந்தியாவுடனான தொழில்துறை ஒத்துழைப்பில் மலேசியா பலன் பெறும்: அன்வார்

இந்தியாவுடனான தொழில்துறை ஒத்துழைப்பில் மலேசியா பலன் பெறும்: அன்வார்

1 mins read
4a989a39-f7f2-47b7-a9e5-b42cd5ed87df
மலேசியாவின் பொருளியல் உத்திகளில் தொழில்துறையினரும் முதலீட்டாளர்களும் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

புதுடெல்லி: இந்தியாவுடனான தொழில்துறை ஒத்துழைப்பில் மலேசியாவுக்குப் பலன் கிடைக்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் செய்யப்படும் புதிய முதலீடுகளும் மலேசியாவுக்குச் சாதகமாக அமையும் என்றார் அவர்.

மலேசியாவின் பொருளியல் உத்திகளில் தொழில்துறையினரும் முதலீட்டாளர்களும் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார். இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தாம் நடத்திய சந்திப்புகள் அதைப் பிரதிபலித்ததாகத் திரு அன்வார் குறிப்பிட்டார்.

“உள்ளூர்த் தொழிற்துறைகளை வலுப்படுத்துகின்ற, அதிக மதிப்பிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கின்ற, அதன் நன்மைகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்கின்ற தரமான முதலீடுகளை மதானி அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்கும்,” என்றார் அவர்.

மலேசிய நிதி அமைச்சருமான திரு அன்வார், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு, தொழில்முறை ஒத்துழைப்பை உத்திபூர்வத் துறைகளில் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து முன்னணி நிறுவனங்களுடன் கலந்துபேசினார்.

டி.ஆர்.பி-ஹைகோம், செகுலா டெக்னாலஜிஸ் இந்தியா, ஏ.டபிள்யூ.எல் அக்ரி பிசினஸ், மதர்சன் குழுமம் முதலியவை அவற்றுள் சில.

18வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திரு அன்வார் வெள்ளிக்கிழமை இந்தியா சென்றுசேர்ந்தார். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அவர் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, பிரதமராக அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம்ச் அது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்அன்வார் இப்ராகிம்இந்தியாபயணம்ஒத்துழைப்புமுதலீடு