மலேசியக் குழந்தை நட்சத்திரம் புத்தெரி ரஃபாஸ்யா தற்போது மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கியுள்ளார்.
12 வயதான புத்தெரி யார் உதவியும் இல்லாமல் சில அடிகளை எடுத்து வைத்துள்ளார்.
அது குறித்து புத்தெரி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இனி அணையாடை (diaper) அணியத் தேவையில்லை என்றும் புத்தெரி குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் நாடகம் ஒன்றில் புத்தெரி நடித்து வந்தார். அப்போது அவர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்குத் தெரியாமல் நாற்காலியை நகர்த்தினார் மற்றொரு நடிகர்.
இதனால் இரும்புக்கம்பிகள்மீது விழுந்தார் புத்தெரி. அதனால் அவரின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
நரம்புகளும் பாதிக்கப்பட்டதால் கால்களிலும் அவர் உணர்ச்சியை இழந்தார். இதனால் புத்தெரியால் நடக்க முடியாமல் போய்விட்டது.
சக்கர நாற்காலியிலும் அணையாடை அணிந்தும் சிரமமான வாழ்க்கையை புத்தெரி எதிர்நோக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
குறும்புச் செயலால் புத்தெரியின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
தற்போது அவர் மீண்டும் நடமாடத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

