தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரைப் பணயம் வைத்து ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றிய அதிகாரி

1 mins read
09d3e435-2aa8-4b65-945f-720b08db9865
படம்: ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை -

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைத் தன்னுயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியுள்ளார் மலேசியத் தீயணைப்பு வீரர் ஒருவர்.

ஜோகூர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் மலேசிய தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டிருந்தனர் .

மார்ச் 3ஆம் தேதியன்று கூலாய் மாவட்டத்தில் கம்போங் மெலாயூ புக்கிட் பத்துவில் மீட்ப்பு பணிக்காகச் சென்றிருந்தபோது, சார்ல்ரிக்சன் ஜேம்ஸ் என்னும் தீயணைப்பு வீரர் வெள்ளம் சூழ்ந்த இடத்தில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியைக் கண்டார்.

அதை மீட்க வேண்டும் என்று முடிவு செய்த அவர், படகில் இருந்து வேகமாக ஓடும் வெள்ளத்தில் குதித்து ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றினார்.

ஆபத்து அதிகமாக இருந்ததையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாகச் செயல்பட்டு ஆட்டுக்குட்டியை மீட்டார் சார்ல்ரிக்சன்.

ஆட்டுக்குட்டியை அதன் உரிமையாளரிடம் சேர்க்க ஆசைப்படுவதாக அவர் கூறினார்.

சார்ல்ரிக்சனின் துணிச்சலான செயலை அவரின் மூத்த அதிகாரிகள் பலரும் பாராட்டினர்.