எண்ணெய் விநியோகச் சிக்கலில் மலேசிய எரிபொருள் விற்பனை நிலையம்

எண்ணெய் விநியோகச் சிக்கலில் மலேசிய எரிபொருள் விற்பனை நிலையம்

1 mins read
468354c2-2cbe-4b1b-90bf-7728c259f7e0
விநியோகச் சிக்கல்கள் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என, தான் எதிர்பார்ப்பதாக ‘கால்டெக்ஸ் மலேசியா’ தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கால்டெக்ஸ் எண்ணெய் நிரப்பு நிலையங்கள் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கால்டெக்ஸ் நிலையங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விநியோகச் சிக்கல்கள் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என, தான் எதிர்பார்ப்பதாக ‘கால்டெக்ஸ் மலேசியா’ தெரிவித்துள்ளது.

“துறைமுகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தாமதங்களே இந்த விநியோக இடையூறுகளுக்குக் காரணம். இது எங்களின் திட்டமிடப்பட்ட விநியோகங்களைப் பாதித்துள்ளது.

“இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி,” என்று அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் போக்குவரத்தை ஈரான் தடுத்ததன் காரணமாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது.

உலகின் எண்ணெய் மற்றம் எரிவாயுடா தேவையில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே விநியோகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்