மலேசிய எரிபொருள் மானியச் செலவு 40 பில்லியன் ரிங்கிட்டைத் தொடும்: பிரதமர் அன்வார்

மலேசிய எரிபொருள் மானியச் செலவு 40 பில்லியன் ரிங்கிட்டைத் தொடும்: பிரதமர் அன்வார்

1 mins read
3ae8856f-69f6-484c-9718-f80c3875c59c
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் எரிபொருள் மானியத்துக்காக 15 பில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சந்தை நிலவரங்களின்படி இச்செலவு கணிசமாக அதிகரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்த ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களுக்கான செலவினம் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டைவிட இருமடங்காக உயர்ந்து, ஏறத்தாழ 40 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என்று அந்நாட்டுப் பிரதமரும் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் எரிபொருள் மானியத்துக்காக 15 பில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சந்தை நிலவரங்களின்படி இச்செலவு கணிசமாக அதிகரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் அவர் குறிப்பிட்டார்.

இந்த மானிய நீட்டிப்பின் மூலம் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியக் குடிமக்கள் அனைவரும் ஒரு லிட்டர் RON95 பெட்ரோலை 1.99 ரிங்கிட் என்ற சலுகை விலையில் தொடர்ந்து பெற முடிகிறது.

இவற்றுடன் மீனவர்கள், விவசாயிகள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளவாடத் துறையினருக்கும் இந்த இலக்குநோக்கிய மானிய உதவி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, 210,000க்கும் அதிகமான விவசாயிகளுக்கான மாதாந்திர ரொக்க உதவித் தொகை 200 ரிங்கிட்டிலிருந்து 400 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அன்றாடத் தேவைகளுக்கு டீசலைப் பயன்படுத்தும் தகுதியுடைய தரப்பினருக்கு ‘மைகார்ட்’ அடையாள அட்டை முறை மூலம் ‘புடி டீசல்’ உதவி வழங்கப்படுவதாகவும் நாட்டின் எரிபொருள் விநியோகம் போதுமான அளவில் நிலையாக உள்ளதாகவும் பிரதமர் அன்வார் உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஎரிபொருள்மானியம்