1எம்டிபி கடனை அடைக்க பெருந்தொகையைப் பயன்படுத்திய மலேசிய அரசு

1எம்டிபி கடனை அடைக்க பெருந்தொகையைப் பயன்படுத்திய மலேசிய அரசு

1 mins read
4b02c860-f92c-4d22-ab9f-c44ffe1d0f86
1எம்டிபி தொடர்பாக 11 ஆண்டுகள் கழித்து மலேசிய அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: 1எம்டிபி கடனை அடைக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான 39.74 பில்லியன் ரிங்கிட் (S$12.07 பில்லியன்) மானியத்தை மலேசிய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆக அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1எம்டிபி தொடர்பாக 11 ஆண்டுகள் கழித்து மலேசிய அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டரசு கடன் நிர்வாகத்தை மேம்படுத்த, மலேசிய அரசாங்கம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று நிதி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்