கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தில் உள்ள நிலவழிச் சோதனைச்சாவடிகள் வாயிலாக சிங்கப்பூருக்கு வந்து, பிறகு இங்கிருந்து மீண்டும் நாடு திரும்பும் மலேசியர்களுக்கான குடிநுழைவுச் செயலியை தமது அமைச்சு தேர்ந்தெடுத்துவிட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மைடிரிப், மைரென்டாஸ், மைபார்டர்பாஸ் (MyTrip, MyRENTAS, MyBorderPass) ஆகிய மூன்று செயலிகளும் சோதனைத் திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டன.
மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக்கூடிய ஆற்றல் எந்தச் செயலிக்கு அதிகம் உள்ளது என ஆராயப்பட்டதாக திரு சைஃபுதீன் நசுத்தியோன் கூறினார்.
“அந்த மூன்று செயலிகளில் ஒன்றை மலேசிய உள்துறை அமைச்சு தேர்ந்தெடுத்துள்ளது. நிதி அமைச்சின் அனுமதியைப் பெற எங்கள் பரிந்துரையைக் கடந்த வாரம் சமர்ப்பித்தோம்,” என்று நவம்பர் 13ஆம் தேதி இரவு சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களுடனான ஒன்றுகூடலின்போது திரு சைஃபுதீன் நசுத்தியோன், பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு சிங்கப்பூரில் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயலி கூடிய விரைவில் அறிவிக்கப்[Ϟ]படும் என்று அவர் கூறினார்.
குடிநுழைவுச் சோதனைச்[Ϟ]சாவடிகளில் பயணிகள் காத்திருப்பு நேரத்தை அந்தச் செயலி அதிகளவில் குறைத்ததாகவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை செவ்வனே எதிர்கொண்டதாகவும் அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்தார்.
அந்தச் செயலி நடைமுறைப்[Ϟ]படுத்தப்பட்ட பிறகும் பயணிகள் தங்கள் கடப்பிதழ்களை குடி[Ϟ]நுழைவு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
முதல் கட்டமாக, அந்தச் செயலியைப் பேருந்து மற்றும் மோட்டார்சைக்கிள் மூலம் எல்லையைக் கடப்பவர்கள் பயன்படுத்தலாம்.
அதன்பிறகு, மலேசியாவில் உள்ள 141 சோதனைச்சாவடி[Ϟ]களிலும் அதைப் பயன்படுத்தலாம்.
மலேசியா-சிங்கப்பூரை நாள்தோறும் கடக்கும் பயணிகளில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் பேருந்து அல்லது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் என்று தரவுகள் காட்டுகின்றன.
“ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதிலும் இச்செயலி பங்களிக்கும்,” என்று அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் கூறினார்.
இதற்கிடையே, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே கட்டப்பட்டு வரும் விரைவு ரயில் சேவைக்கு ஒற்றைக் குடிநுழைவுச் சோதனைச்சாவடியை அமைப்பது குறித்து சிங்கப்பூருடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

