மலேசியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரிய பாடல் அணியான பிளாக் பிங்கின் இசை நிகழ்ச்சி நடந்தது.
கோலாலம்பூரில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நுழைவுசீட்டுகளை வாங்கினர்.
அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர் தான் வழக்கறிஞர் நாஸ் ரகுமான்.
நாஸ் இரண்டு நுழைவுச் சீட்டுகளை 488 மலேசிய ரிங்கிட்டில் வாங்கியுள்ளார்.
மார்ச் 4ஆம் தேதி நடத்த நிகழ்ச்சிக்கு சென்ற நாஸூக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நுழைவுச்சீட்டில் இருந்த ஒரு இருக்கையை அங்கு காணவில்லை.
அதனால் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த அந்த நிகழ்ச்சியை நாஸ் நின்றவாறு அல்லது படிகளில் அமர்ந்தவாறு பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நாஸ் போல மேலும் சிலரும் தங்களுக்கு இருக்கைகள் இல்லாமல் போனது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இழப்பீடு கேட்டார் நாஸ்.
தொடர்புடைய செய்திகள்
தமக்கு தகுந்த இழப்பீடு வராததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார் அவர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 298,000 வெள்ளி(1 மில்லியன் ரிங்கிட்) வரை இழப்பீடு கேட்டுள்ளார் நாஸ்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பல முறை பேசிப்பார்த்தும் இரு பிரிவினர் இடையே சமாதானம் ஏற்படாததால் வழக்குத் தொடுப்பதாக அவர் கூறினார்.
வழக்கில் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படவில்லை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எப்போதும் வாடிக்கையாளர்களைக் கவனத்தில் கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதை நினைவூட்ட தான் இந்த வழக்கு என்றார் நாஸ்.