பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் தேசிய சேவை 3.0 தொடங்க கிட்டத்தட்ட 65 நாள்கள் உள்ளன.
ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அந்நாட்டில் தேசிய சேவை மீண்டும் தொடங்கிவைக்கப்படுகிறது.
இந்நிலையால், முகாம்களில் பாதுகாப்பு, துன்புறுத்தல் குறித்து பயிற்சி பெற இருப்போரும் பெற்றோரும் கவலை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பான பயிற்சி சூழல், பயிற்சி பெற இருப்போரைப் பாலின ரீதியிலாக பிரிப்பது, சுத்தமான உணவுவகைகள், துன்புறுத்தல்கள் மற்றும் மரணம் நிகழாதிருப்பது ஆகியவற்றை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சேவை தொடங்கும் நேரம் குறித்து கல்விக்கான பெற்றோர் செயற்குழுவின் தலைவர் திருவாட்டி நூர் அப்துல் ரஹிம் அக்கறை தெரிவித்தார்.
கல்விக்கு மாணவர்கள் முன்னுரிமை தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

