காமெனி மறைவிற்கு மலேசிய நாடாளுமன்றம் மௌன அஞ்சலி

காமெனி மறைவிற்கு மலேசிய நாடாளுமன்றம் மௌன அஞ்சலி

1 mins read
abfe3498-7467-467e-814f-f5403fe44146
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கண்டித்தார். - படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்

கோலாலம்பூர்: ஈரானியத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திங்கட்கிழமையன்று (மார்ச் 2) மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், நாட்டின் தலைவரின் இழப்பால் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ள ஈரானிய மக்களுக்குத் தமது இரங்கலையும் தெரிவித்தார்.

இஸ்ரேல், அமெரிக்காவின் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட ஈரானியத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் தமது மௌன அஞ்சலியைச் சமர்ப்பிப்பதாக மலேசிய நாடாளுமன்றக் கீழவையில் மார்ச் 2ஆம் தேதி உரையாற்றியபோது அவர் கூறினார்.

அதில் ஈரானியத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் அஜிஸ் நசீர்சாதே, ஈரானிய முன்னாள் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத், ஆயுதப்படைத் தலைவர்கள், பொதுமக்கள், ஈரானின் மினாப் பகுதியில் கொல்லப்பட்ட 180 பிள்ளைகளும் அடங்குவர் என்றார் திரு அன்வார்.

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் குறித்து விவாதிக்க அவசரத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்