மலேசியா சரியான பாதையில் செல்கிறது: அன்வார்

மலேசியா சரியான பாதையில் செல்கிறது: அன்வார்

1 mins read
b61b87dd-108e-4e98-bed0-f723c19dc691
நாட்டின் நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு அனைத்து இனத்தவரும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று திரு அன்வார் கேட்டுக்கொண்டார். - படம்: இணையம்

கோலாலம்பூர்: மலேசியா முன்னேற்றத்தை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். குறிப்பாகப் பொருளியல் மேம்பாட்டை அவர் சுட்டினார்.

சிரம்பானின் பரோய் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் தாம் அவ்வாறு எடுத்துரைத்ததாக ஃபேஸ்புக்கில் திரு அன்வார் பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் ஒற்றுமை அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

நாட்டின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொள்வதாகப் பிரதமர் அன்வார் கூறினார்.

“வெளிப்படைத்தன்மை உட்பட இன்ன பிற கருத்துகளைப் பேசுவோர் நடைமுறையில் அதிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையோரிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

“மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாங்கம், நாட்டு மக்களின் உரிமைகளையும் பொருளியலையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டின் நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு அனைத்து இனத்தவரும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.

மலேசியப் பொருளியலையும் மக்களின் உரிமைகளையும் வலுப்படுத்த ஒற்றுமை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்