பினாங்கு சாலையில் சறுக்குப் பலகை செலுத்தியவரை காவல்துறை தேடிவருகிறது

பினாங்கு சாலையில் சறுக்குப் பலகை செலுத்தியவரை காவல்துறை தேடிவருகிறது

1 mins read
6a04f8f4-8e40-4df1-a9dc-031a1c269a3d
ஜாலான் துன் சார்டொன் சாலையில் ஒருவர் சறுக்குப் பலகை செலுத்தியதைக் காட்டும் காணொளிப் படங்கள். - படம்: த ஸ்டார்/ஏசியா நியூஸ் நெட்வொர்க்

பினாங்கு: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள சாலை ஒன்றில் ஒருவர் சறுக்குப் பலகை செலுத்துவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வருகிறது.

அந்தச் சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஜாலான் துன் சார்டொன் சாலையில் ஒருவர் சறுக்குப் பலகையில் செல்வதைக் காட்டும் 47 விநாடிக் காணொளியில் இடம்பெற்ற நபரை அவர்கள் தேடிவருகின்றனர்.

“இது அந்த நபருக்கும் மற்ற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது,’ என்று காவல் அதிகாரியான கமாருல் ரிஸால் ஜெனால் கூறினார்.

போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விதிகளில் இடம்பெற்றுள்ள ஒரு பிரிவின்கீழ் அந்தச் சம்பவம் விசாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்தோர், ‘பாலிக் புலாவ்’ காவல்துறைத் தலைமையகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்