சென்ற வாரம் வேலைக்காக சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த மலேசியத் தம்பதியர் சாலை விபத்தில் மாண்டனர். கடந்த வியாழக்கிழமையன்று நிகழ்ந்த அதை நேரில் கண்டவர்களை மலேசிய காவல்துறையினர் தேடுகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற 36 வயது லோ கிம் சியோங்கும் கர்ப்பமாக இருந்த அவரின் மனைவி 30 வயது டான் லே ரூவும் விபத்தில் உயிரிழந்தனர்.
விபத்தைக் கண்டோர் +60185779391 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


