மலேசிய பொதுச் சேவை: வாரம் இருநாள் வீட்டிலிருந்து பணியாற்ற ஒப்புதல்

மலேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது

மலேசிய பொதுச் சேவை: வாரம் இருநாள் வீட்டிலிருந்து பணியாற்ற ஒப்புதல்

2 mins read
அத்தியாவசியச் சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது
a7e18dde-da60-4b45-ba24-94ec97412894
தலைநகரின் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய நாடாளுமன்றம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்ரா ஜெயா: மலேசிய நாடாளுமன்றம் நாட்டில் உள்ள அரசாங்கப் பொதுச் சேவையினர் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் வாரத்தில் இரண்டு நாள்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் மசோதாவை ஏற்றுக்கொண்டுள்ளது.

அதன் விவரங்களை மலேசியப் பொதுச் சேவைத் துறை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சனிக்கிழமை (ஜூன் 27) செய்தி வெளியிட்டுள்ளது.

அலுவலகம், இல்லம் என இரண்டும் கலந்த ‘ஹைபிரிட்’ வேலை நாள்கள் (HWD) என்று திட்டத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின்படி, வீட்டிலோ வேறு இடத்திலோ இருந்து இரண்டு நாள்கள் பணியாற்றுவதற்குப் பொதுச் சேவை ஊழியர்கள் அவர்களது துறைத் தலைவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

அதன்படி மூன்று நாள்கள் அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். துறையின் தேவைகளையும் நடைமுறைகளையும் கருத்தில்கொண்டு இத்திட்டம் செயல்படும்.

மாறுபடும் மாநில ஓய்வுநாள்கள்

ஒவ்வொரு மாநிலத்தின் மாறுபட்ட வார ஓய்வு நாள்களைப் பொறுத்து ஊழியர்களின் மொத்த வேலை நாள்கள் அமையும்.

ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் ஓய்வு நாள் என்று அமைந்துள்ள மாநிலங்களில் பொதுச் சேவை ஊழியர்கள் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு வரவேண்டும்.

கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் வார ஓய்வு நாள் வெள்ளிக்கிழமையாக அமைவதால், ஞாயிறு, வியாழன் ஆகிய நாள்கள் அலுவலகத்துக்கு ஊழியர்கள் கட்டாயம் வரவேண்டிய நாள்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மத்திய கிழக்குப் பூசலால் தற்போது அரசாங்கப் பொதுச் சேவையில் நடைமுறையில் இருக்கும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஏற்பாடுகளுக்குப் பதிலாகப் புதிய திட்டம் நடப்புக்கு வரும் என்று அரசாங்கப் பொதுச் சேவைத் துறை தெரிவித்தது.

அதிகாரபூர்வ வேலை நேரத்தில் மாற்றமில்லை

அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய வேலை அணுகுமுறை பொதுச் சேவை ஊழியர்களுக்கு அதிகாரபூர்வ பணி நேரத்தைக் குறைக்காமல் நீக்குப்போக்கான பணியிட சூழலை அமைத்துத் தருகிறது என்று அத்துறை பெர்னாமா ஊடகத்திடம் கூறியது.

நேரடிச் சேவை வழங்கும் துறைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. பாதுகாப்பு, தற்காப்பு, சுகாதாரம், கல்வி, நீதி ஆகிய துறைகளின் அதிகாரிகள் வழக்கம்போலவே சேவைகளை வழங்குவார்கள்.

அரசாங்கத்தின் அத்தியாவசியச் சேவைகள் புதிய ஏற்பாட்டினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று பொதுச் சேவை உறுதியளித்தது.

குறிப்புச் சொற்கள்